Tuesday, August 30, 2016

Bandipur, Iruppu Falls, Kabini Dam - 2


பயணம் என்றாலே எனக்கு அலர்ஜினு சொல்லறவங்கள பாக்கும் போது எனக்கு ஒரு அலர்ஜி வருது..யான் இப்டி,,,,,, அப்டினு ஆராயும்போதுதான் இந்த ட்ராவல் அலர்ஜி உலகத்துல ரொம்ப பேர்க்கு இருக்கறது தெரிய வந்தது.

எனக்கும் சின்ன வயசுல அப்பா அம்மா கூட டூர்லாம் போகும்போது ஒரு நாளைக்கு மேல தாங்காது, வாந்தி மயக்கம், யாண்டா வந்தோமுனு இருக்கும், கொஞ்ச கொஞ்சமா பயணங்களை ரசிக்க ஆறமிச்ச அப்புறம் பயணங்களை ரொம்பவும் விரும்ப ஆரமிச்சுட்டேன்.

புதிய மனிதர்கள், உணவுகள், கலாச்சாரம், காலநிலை எல்லாம் அனுபவிக்கற அந்த சுகம் எல்லாமே ரொம்ப பிடிச்சுயிருந்தது. நம்ம ஆளுங்க சில பேர் நிலவுக்கு போனாலும் தமிழ்நாடு ஸ்டைல் ஹோட்டல் எங்க இருக்கு, இட்லி தோசை எங்க கிடைக்கும்னு  தேடுவாங்க, இன்னும் சில புத்திசாலிங்க புலி கொழம்பு, பொடி எல்லாம் ரெடி பண்ணதுக்குகப்புறம் தான் டூர் பிளானே போடுவாங்க. நாங்கல்லாம் இப்டித்தான்னு பெருமையா சொல்றவங்களையும் பார்த்து இருக்கேன். ட்ராவல் பண்றதுக்கே இப்படின்னா பயண கட்டுரைலாம் படிப்பாங்கனு கனவுல கூட நினைக்க கூடாது.

இதுலாம் தெரிஞ்சு இருந்தும் பயண கட்டுரை எழுதறேன்ற பேர்ல யாண்டா மொக்க போடறன்னு நீங்க நினைப்பிங்க..இத ஒரு பத்து பேரு படிச்சாலே அது எனக்கு பெரிய விஷயம் யராவது ஒன்னு ரெண்டு பேருக்காகவாது இது பயன்படும்னா அது ரொம்ப பெரிய விஷயம். அதனாலதான் ஏதோ எனக்கு தெரிஞ்ச அளவுல எழுதிக்கிட்டு இருக்கேன். நாளைக்கு (நாளைக்குனா நாளைக்கே இல்ல...ஏதோ ஒரு நாள் ) நீங்க அந்த இடத்துக்கு போகும் போது என்ன பாக்கலாம் எங்கு தங்கலாம்னு ஒரு சின்ன டிப்ஸ் இதுல கிடைக்கும் அவ்ளோதான்......

சரி வாங்க அருவி பாக்க போலாம், ஒரு முந்நூறு மீட்டர் நீளத்தை நடந்து சென்று தான் அருவி அடைய முடியும். அந்த அருவி சாரல் அந்த இடம் முழுவதும் இருப்பதால் பார்க்கும் இடங்கலெல்லாம் பசுமை தெரியுதாடி நந்தலாலாதான். இந்த மாதிரி மழை காடுகள் அழகுடன் சேர்த்து ஆபத்தும் நிறைந்தவை, சிறிய அளவிலான விஷப்பூச்சிகள் அதிகம் இருக்குமிடம் இந்த மழை காடுகளே. செல்லும் வழியில் அருவியில் இருந்து வரும் நீர்ஓடையை பார்க்கும் போதே மனதில் அருவி பார்க்கும் ஆர்வமும் அதிகரிக்க ஆரம்பித்து விடுகிறது. சிறிது நேர நடையில் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த அருவியின் தரிசனம் கிடைக்கும். குற்றால அருவி போல பப்ப்ப்பரரரபேனு இருக்குமுன்னு நெனச்சா....  சும்மா டெரர்ரா இல்ல இருக்கு....




பயணம் தொடரும்...

Friday, August 5, 2016

Bandipur, Iruppu Falls, Kabini Dam - 1

உடன் பணிபுரிபவரின் கல்யாணத்திற்க்காக வயநாடு செல்ல வேண்டி இருந்தது அதனுடன் இன்னும் சில இடங்களை தேர்வு செய்து அரை குறை திட்டத்துடன் எங்கள் பயணம் ஆரம்பமானது.
காலைல 5.30க்கு எல்லாரும் ஆபீசு கிட்ட வந்துடனும், யாரும் லேட் பண்ண கூடாது OK வா...காலைல நான் ஆபீஸ் கிட்ட போகும்போது மணி 6.30. நானாவது சைக்கிள்ல பெல் இல்லம்தான் வரேன், ஒருத்தன் சைக்கிளே இல்லாம வரான்னு சொல்லற மாதிரி ஒருத்தன் 7.30க்கு வரான். அப்படியே அவனை தூக்கி வண்டில போட்டு ஒரு கும்மு கும்மிட்டு என்ஜின் ஸ்டார்ட் ஆனது 7.40...டிராபிக் இல்லாத பெங்களூர்ல காலை பயணம் கண்டிப்பா நீங்க அனுபவிக்க வேண்டியது...என்னா ஜில்லு! என்னா ஜில்லு!

அது  என்ன மாயமோ மந்திரமோ தெரியல எப்போ மைசூர் ரோடு போனாலும் பிடதில (நம்ம நித்தியானந்தா இருக்கற அதே பிடதி தான்) தட்ட இட்லி சாப்பிட்டு போறது ஒரு பழக்கமா போச்சி, சும்மா சொல்ல கூடாது இட்லி சுமார்தான். டிபன் சாப்பிட்டு என்ன வண்டி ஓட்ட விடாம 30நிமிடத்திற்கு ஒருதடவை கார நிறுத்த சொல்லி டீ குடிக்கறது போட்டோ எடுக்கறதுனு பசங்க ஒரே அலும்பு, எந்த கமிட்மெண்டும் இல்லாம பயணம் செய்யறது கூட நல்ல இருந்தது.

ஏற்கனவே பண்டிபூர் வழியான பயணம் சென்றிருந்தாலும் இந்த முறை நண்பர்களோடு சென்றது ரொம்ப ஜாலி...அதுலயும் பயண அனுபவமமே  இல்லாத ரெண்டு பேர வச்சு செமயா கிண்டல் பண்ணிட்டு சிரிச்சுட்டு போனதுல வயிறு புண்ணாச்சி. இந்த காட்ட கடக்கும் போது ஹார்ன் அடிக்க கூடாது, தம் அடிக்க கூடாது, தண்ணி அடிக்க கூடாது, வண்டிய நடுவுல நிறுத்த கூடாது விலங்குகளுக்கு சாப்பாடு கொடுக்க கூடாது....இப்படி ஏகப்பட்ட கூடாது கூடாது கூடாது....இதை எல்லாம் செக்கபோஸ்ட்ல சொல்லி அனுப்புறாங்க...ஆனா வழில ரெண்டு மூணு கார நிறுத்தி இறங்கி போட்டோ எடுத்ததை பார்க்க நேர்ந்தது, இத பார்த்துட்டு நாமும் இறங்கலாமுன்னு பசங்க சொன்னாங்க அதுக்கு நான் சொன்ன பதில் "நோ". நம்ம நின்னா நம்மள பார்த்துட்டு இன்னும் நாலு பேரு (அது என்ன நாலு பேரு நாப்பது பேருன்னு வச்சிக்கலாம்) நிற்பான். நாங்க கார்லா இருந்த படியே கிளிக்கிட்டு போனதுல மான், மயிலு கிளிக்க முடிஞ்சுது. யானை பாக்கனும்ம்னா காலை நேரத்துல வரணும்.
நம்ம கிளம்புன நேரத்துக்கு யானையோட சாணி தான் பாக்க முடிஞ்சுது.



 இப்படியே அடர்ந்த காட்டில வழி கேக்க கூட ஆல் இல்லாம ஒருவழியா இருப்பு நீர்வீழ்ச்சி அடைந்தோம். எங்க கரோட சேர்த்து ஒரு பத்து வண்டி தான் அந்த பார்கிங்கில இருந்துது. 5ரூபா டிக்கெட் வாங்கி அருவியை நோக்கி நடக்க ஆரம்பிச்சோம். முதலில் எங்களை வர வரவேற்றது கரும்பச்சை தேள்.
இந்த தேளுக்கு எட்டு காலு ஒரு வாலுன்னு சொல்லி போர் அடிக்காம மேட்டருக்கு வரேன். நார்மலா நம்ம ஊருக்குள்ள இருக்கற தேளுக்கு விஷம் ரொம்ப கம்மிதான் நம்மள கடிச்சா  (சிறுவர்களுக்கு பாதிப்பு இருக்கும்) ஒன்னும் ஆகாது ஆனா நம்ம ஆளுங்க பயத்துல உச்சா போறதுலாம் வேற கதை, ஆனா இந்த மாதிரி பெரிய, கருப்பு, நீல தேள்களுக்கு ஆளை கொள்ளுமளவுக்கு கூட விஷம் இருக்கும்.  நான் சின்ன வயசா இருக்கும் போது (இப்பவும் சின்ன வயசுதான்) எங்க வீட்ல "தேள் கடிக்கு இங்கு மருந்து கொடுக்கப்படும்" னு போர்டு வைக்காமலே எங்கம்மா சித்த டாக்டர் ரேஞ்சுக்கு தேள் கடிக்கு தும்பைப்பூ இலையைலாம் கொடுத்து வைத்தியம் பாக்க ஆரமிச்சுட்டாங்க அத நம்பி வாரத்துல ரெண்டுபேராவது வந்து மருந்து வாங்கி சாப்பிட்டு எங்கம்மாவை
டாக்டரா ஆக்க பார்த்தாங்க ஆனா எங்க அப்பா கொட்ன கொட்டுல தேள் கொட்னதுக்கு மருந்து கொடுக்கறதா அம்மா நிறுத்திடாங்க, மேட்டர் என்னனா யாருக்காது விஷம் ஏறி போய்ட்டாங்கன்னா நீ கம்பி தான் என்னனும்னு எங்கப்பா சொன்னதோட சரி , டக்டர் ஆகற ஆசைல தும்பை செடியை போட்டு மூடிட்டாங்க எங்க அம்மா . அதுக்கு அப்புறம் எங்க அம்மாவோட பேஷண்ட்லாம் என்ன ஆனாங்கனு  தெரியல....








பயணம் தொடரும்...